கரூர் பலி: யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்- அமைச்சர் என். ஆனந்த்
கரூர் பலி நிகழ்ந்து முதலாமாண்டு நினைவு நாளையொட்டி அமைச்சர் என். ஆனந்த் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி....
கரூர் பலி நிகழ்ந்து முதலாமாண்டு நினைவு நாளையொட்டி அமைச்சரும் தவெக பொதுச்செயலருமான என். ஆனந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த ஆண்டு இதே நாள், மக்கள் விரும்பும் முதல்வர், தமிழக மக்களுக்கு ஆலமரமாகத் திகழும் வெற்றித் தலைவருக்கும், அந்த ஆலமரத்தின் நிழலாய்த் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்கள், வெற்றித் தலைவரின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரது நெஞ்சங்களிலும் தீரா வலி ஏற்பட்டு, அழியாச் சுவடு உருவான நாள்!
மாற்றத்தை உருவாக்க நினைத்து, மக்கள் நலன் காக்கத் துணிந்த மக்கள் தலைவரின் பயணத்தில், யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்!
Advertisement
Advertisement
தமிழக மக்களின் விடிவெள்ளியாய்த் திகழும் நம் வெற்றித் தலைவரின் நெஞ்சில் குடியிருக்கும் நம் இரத்த சொந்தங்களைப் பிரிந்து ஓராண்டாய்த் தவிக்கும் நம்மை வாரி அனைத்து ஆறுதல் சொல்ல, அவரன்றி, வேறொருவர் உண்டோ? நம் கரூர் சொந்தங்களே!
இந்நாளில், நம் நெஞ்சில் குடியிருக்கும் பிரிந்த நம் சொந்தங்களுக்கு வெற்றித் தலைவரின் வழியில் எனது மலரஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி முதல்வரும், தவெக தலைவருமான விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
On the occasion of the first-year remembrance day of the Karur tragedy, Minister and TVK General Secretary N. Anand has expressed his condolences.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.