FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து கனிமொழி வெளியிட்டுள்ள பதிவு குறித்து...

27 செப்டம்பர் 2026, 9:42 am IST
திமுக எம்.பி. கனிமொழி - படம் - எக்ஸ்
பகிர்:

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆன நிலையில், இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.

இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் ”தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்” என்று முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

DMK MP Kanimozhi issued a statement on Sunday (Sept. 27) paying tribute to those who lost their lives in the stampede in Karur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments