தமிழகத்தில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
தனியார் பேருந்துகளிலும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
தனியார் பேருந்துகளிலும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் விடியல் பயண திட்டத்தை கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இதனை எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண பேருந்துகள் என விரிவுபடுத்தி ’வெற்றி பயணம்’ என முதல்வர் விஜய் அக். 2 முதல் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறுவர் என அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஏற்கனவே, நகர்ப்புறப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தனியார் பேருந்துகளை பெரிதளவில் பெண்கள் பயன்படுத்துவதில்லை எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வெற்றி பயணத் திட்டம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், தனியார் பேருந்துகளை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வெற்றி பயணத் திட்டத்தை தனியார் பேருந்துகளிலும் செயல்படுத்தக் கோரி செப். 29 நள்ளிரவு முதல் செப். 30 வரை தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனியார் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களின் பயணச் செலவை ஏற்று தனியார் பேருந்துகளுக்கு அரசு மானியம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலவச மகளிர் பயண திட்டத்தால் எங்களுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நாளை 29.09.2026 நள்ளிரவு 12.00 மணி முதல் 30.09.2026 நள்ளிரவு 12.00 மணி வரை 24 மணி நேரம் நமது பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்தம் செய்வது என்று நமது சம்மேளனத்தில் முடிவு செய்ய பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாடு முழுவதும் எங்களது தனியார் பேருந்துகள் ஒரு நாள் மட்டும் இயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Private bus owners are set to observe a one-day strike, demanding the implementation of the free bus travel scheme on private buses as well.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.