நீடாமங்கலம் பகுதியில் கட்டடங்கள் அதிர்வு! பொது மக்கள் அச்சம்!
நீடாமங்கலத்தில் அதிர்ந்த கட்டடங்கள் பற்றி..
நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் 'டும்' எனப் பயங்கர சப்தம் கேட்டது அதேசமயம் கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
நீடாமங்கலம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். பல வீடுகளில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு பொதுமக்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2.22 மணிக்கு ' டும் ' என பயங்கர சப்தம் கேட்டது. அதேசமயம் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களில் ஒருவித அதிர்வு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கட்டடங்களில் ஒருவித அசைவுகள் ஏற்பட்டது. முல்லைவாசல் கிராமத்திலும் இதுபோன்ற நிலை இருந்தது. அங்குக் குடியிருப்பு வீடுகளை விட்டு அச்சத்துடன் பொதுமக்கள் வெளியேறினர். நிலநடுக்கம் ஏற்பட்டிருக்குமோ என அச்சத்துடன் கிராம மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
இதுதொடர்பாக, மேலும் விசாரித்த போது பயங்கர சப்தத்துடன் அதிர்வு ஏற்பட்ட சமயம் ஜெட் விமானம் ஒன்று சென்றதாகவும் அதன் கதவுகள் திறக்கும்போது பயங்கர சப்தம் ஏற்படுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.