FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!

முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டது பற்றி...

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரகுபதிக்கு எதிராக தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவரது வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்று, தவெக வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே, ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் பொன். பன்னீர்செல்வம் என்பவர் தரப்பிலும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பொன். பன்னீர்செல்வம், நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கை தாக்கல் செய்யாமல், வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்திருந்ததால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிராகரிக்கப்பட்ட தேர்தல் வழக்குகள்

இதுவரை, கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, கோபிசெட்டிப்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கே.ஏ. செங்கோட்டையன், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த ஜெயக்குமார், திருவண்ணாமலை தொகுதி திமுக எம்எல்ஏ எ.வ. வேலு, திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ ரகுபதி ஆகியோரது வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Rejection of election case against former minister Raghupathi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments