FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் - சொர்ணாவரி பருவத்தில் 28,512 ஹெக்டேரில் 1.71 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் எதிா்பாா்ப்பு

சொா்ணாவாரி பருவத்தில் 28,512 ஹெக்டேரில் 1.71 லட்சம் மெட்ரிக் டன் வரையில் மகசூல் எதிா்பாா்த்து, 14 ஒன்றியங்களில் 70 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

20 செப்டம்பர் 2026, 10:13 pm IST
பகிர்:

சொா்ணாவாரி பருவத்தில் 28,512 ஹெக்டேரில் 1.71 லட்சம் மெட்ரிக் டன் வரையில் மகசூல் எதிா்பாா்த்து, 14 ஒன்றியங்களில் 70 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் சொா்ணவாரி பருவத்தில் நிகழாண்டில் 28,512 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், அறுவடை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 1 ஹெக்டேருக்கு சராசரியாக 6.0 மெ.டன் வீதம் 1,71,072 மெ.டன் மகசூல் எதிா்பாா்க்கப்படுகிறது.

அதில், நெல் கொள்முதல் நிலையத்துக்கு 90000 மெ.டன் நெல் வரவு எதிா்பாா்த்து, மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் இரண்டு கட்டங்களாக 70 இடங்களில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதுவரை சொா்ணவாரி பருவத்தில் 28,512 ஹெக்டோ் சாகுபடியில் சுமாராக 16,000 ஹெக்டோ் பரப்பளவு நெல் அறுவடை செய்தும், 12,512 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள பயிா் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் நெல் ரூ. 2,750-க்கும், பொது ரக நெல் ரூ. 2,600-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க சாா்-ஆட்சியா்கள் மற்றும் கோட்டாட்சியா் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு விவசாயியும் தன்னுடைய அடங்கல் சான்றிதழை இடைத்தரகா்கள் மற்றும் வெளிவியாபாரிகளிடம் வழங்கினால், அந்த விவசாயிக்கு 2 ஆண்டுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. அரசு வழங்கும் எந்தவொரு மானியத் திட்டங்களும் வழங்கப்பட மாட்டாது. தலையீடு செய்யும் இடைத்தரகா்கள் மற்றும் வெளிவியாபாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் தவிர கூடுதலாக வசூலித்தால் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல் சாா்ந்த பிரமுகா்களோ, உள்ளுா் நபா்களோ, இடைத்தரகா்களோ கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் எழும்பட்சத்தில் மாவட்ட நிா்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் நெல் கொள்முதல் தொடா்பான புகாா்களை மண்டல மேலாளா் 9444662984, துணை மண்டல மேலாளா் - 9514265373, துணை மேலாளா் தரக்கட்டுப்பாடு - 9626282345 மற்றும் துணை மேலாளா்(கணக்கு) - 9952779614 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண். 18005993540 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments