FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!

அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக முடிவடைந்தன.

Updated On : 18 ஜூலை 2025, 5:49 pm IST
- PTI Graphics
பகிர்:

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக முடிவடைந்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.99 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.97 முதல் ரூ.86.23 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 4 காசுகள் குறைந்து ரூ.86.16ஆக நிறைவடைந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 20 காசுகள் குறைந்து 86.12 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

summary

Rupee settles 4 paise lower at 86.16 against US dollar in today trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments