வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர்? அறிவது எப்படி? பயன்கள் என்னென்ன?
வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர் என்பதை அறியும் புதிய அம்சத்தின் பலன்கள் குறித்து...
வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கையை இனி அட்மினால் பார்க்கக் கூடிய வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.
பீட்டா வெர்ஷன் வாட்ஸ்ஆப்பில் சோதனை முறையில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த அம்சத்தை வாட்ஸ்ஆப் வழங்கியுள்ளது.
இதன்மூலம் வாட்ஸ்ஆப் சேனலில் பதிவிடப்படும் ஒவ்வொரு பதிவையும் எத்தனைபேர் பார்க்கின்றனர் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். ஆனால், இதனை வாட்ஸ் ஆப் சேனலின் அட்மினால் மட்டுமே அறிய முடியும். சேனலில் உள்ள ஃபாலோயர்ஸால் (பின்தொடர்பவர்களால்) பார்க்க முடியாது.
Advertisement
Advertisement
சேனல் பதிவுகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கையை அறிவது எப்படி?
வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்தால், சேனல் பதிவுகளுக்கு கிடைக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தானியங்கியாகவே செயலியால் கண்காணிக்கப்படும்.
ஒவ்வொரு பதிவுக்கு வலதுபுறம் கீழே எததனை பேர் இப்பதிவைப் பார்த்துள்ளனர் என்பதை எண்ணிக்கையின் மூலம் அட்மினால் அறிந்துகொள்ள முடியும்.
அட்மினாக சேனலின் உள்ளே நுழையும்போது ஒவ்வொரு பதிவுக்கு கீழேயும் சில எண்ணிக்கை காட்டும். அந்த எண்ணிக்கையே அப்பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கையாகும்.
பதிவுகளை பார்த்தவர்கள் எண்ணிக்கையை அட்மினால் மட்டுமே பார்க்க முடியும்.
பதிவை எவ்வளவு அதிகமானோர் பார்க்கின்றனர் என்பதை வைத்து அப்பதிவு சென்று சேர்ந்துள்ள நபர்களின் எண்ணிக்கையை அறிய முடியும்.
பயன்கள் என்னென்ன?
வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளுக்கு பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) எத்தனை பேர் ஈடுபாடு காட்டுகின்றனர் என்பதை அட்மினால் புரிந்துகொள்ள முடியும்.
எந்த வகையான பதிவுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கின்றனர் என்பது குறித்து தெளிவடைந்து அது தொடர்பான பதிவுகளை அதிகரிக்க முடியும்.
இதனால், ஒரே விதமான விருப்பங்களை பிரதிபலிப்பவர்களை வகைப்படுத்தி ஒருங்கிணைக்க முடியும்.
அதிக நபர்களுக்குச் சென்று சேர்ந்த பதிவு குறித்து அறிய முடியும்.
ஃபாலோயர்ஸ்களால் பார்க்க முடியுமா?
வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதை அட்மினால் மட்டுமே அறிய முடியும். சேனலில் பின்தொடர்பவர்களால் பார்க்க முடியாது.
சேனல் பதிவுகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கையை பின்தொடர்பவர்கள் அறியும் வகையிலான முயற்சியில் சோதனைகள் நடைபெற்று வருவதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
How many people view WhatsApp Channel posts? How can you find out What are the benefits
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.