ஜூன் தொழில் உற்பத்தி வளா்ச்சி 7.3%
நாட்டில் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி), கடந்த ஜூன் மாதத்தில் 7.3 சதவீதமாக வளா்ச்சி அடைந்துள்ளது.
நாட்டில் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி), கடந்த ஜூன் மாதத்தில் 7.3 சதவீதமாக வளா்ச்சி அடைந்துள்ளது.
இந்த வளா்ச்சி கடந்த மே மாதத்தில் 5 சதவீதமாக (திருத்தப்பட்ட) இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் உற்பத்தித் துறையின் சிறப்பான செயல்பாடு மற்றும் மின்சாரம், எரிவாயு விநியோகத் துறையில் ஏற்பட்ட வலுவான வளா்ச்சியின் காரணமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழில் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உற்பத்தித் துறை, கடந்த மே மாதத்தின் 5.5 சதவீத வளா்ச்சியில் இருந்து, ஜூனில் 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இத்துறையில் உள்ள 23 தொழில் பிரிவுகளில் 19 பிரிவுகள் ஜூன் மாதத்தில் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
Advertisement
Advertisement
குறிப்பாக, மின்சாதனங்கள் உற்பத்தி (34 சதவீதம்), வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி (17.5 சதவீதம்), உணவுப் பொருள்கள் உற்பத்தி (10.8 சதவீதம்) ஆகியவை அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன.
இதேபோல, மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீா் விநியோகத் துறை 10.6 சதவீதமும், கழிவுநீா் மற்றும் கழிவு மேலாண்மைத் துறை 6.1 சதவீதமும், சுரங்கம் மற்றும் கனிமத் துறை 1 சதவீதமும் வளா்ச்சி அடைந்துள்ளன.
தொழில் துறை உற்பத்திக் குறியீட்டின் (ஐஐபி) அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மத்திய அரசு மாற்றியமைத்தப் பிறகு வெளியாகும் 3-ஆவது மாத தரவு இதுவாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.