தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 3) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (அக். 1) சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ.1,09,440-க்கு விற்பனையானது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமையில் (அக். 2) சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,200-க்கும் கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,775-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் இன்று (அக். 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. ரூ. 1,09,400-க்கும் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,675-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ஒரு கிராம் ரூ. 245-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) வெள்ளி, ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Today's status of Gold and Silver Rate
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.