FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

8400mAh பேட்டரி, சோனி கேமரா, 100 வாட்ஸ் சார்ஜிங்! அசத்தல் ஸ்மார்ட்போன் ஐக்யூ 16!

ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஐக்யூ 16 - படம் / நன்றி - ஐக்யூ
பகிர்:

ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மற்ற நாடுகளில் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், இந்தியாவில் அறிமுகமாவது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானபோது ரூ. 64,999க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சீனாவில் ஐக்யூ 16 அறிமுகமான நிலையில், அங்கு இந்திய ரூபாய் மதிப்பில் 86,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

சிறப்பம்சங்கள்

  • ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் 6.85 அங்குல அமோலிட் திரை கொண்டது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 165Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 10,000 nits திறன் உடையது.

  • குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் 6 ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • 12GB அல்லது 16GB உள்நினைவகம், 256GB மற்றும் 512GB நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கேமரா பிரியர்களுக்காக 50MP சோனி மேகரா கொடுக்கப்பட்டுள்ளது. 3 மடங்கு அதிகம் ஜூம் செய்துகொள்ளலாம். செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 32MP கேமரா கொடுக்கப்படடுள்ளது.

  • நீடித்த பேட்டரி திறனுக்காக 8,400mAh பேட்டரி உள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வையர்லெஸ் சார்ஜிங் மூலம் 40W திறன் வேகத்தில் சார்ஜ் செய்யலாம்.

  • தூசி மற்றும் நீர்ப்புகாத் தன்மைக்காக IP68 / IP69 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

summary

iQOO 16 smart phone launched in china spotted on Geekbench

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments