FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது பற்றி...

57 வினாடிகள் முன்பு
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி... - IANS
பகிர்:

கச்சா எண்ணெய் விலை உயர்வால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் அபாயம் இருப்பதால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்து 108.62 டாலராக உள்ளது.

Advertisement

Advertisement

இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (வியாழன்) வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.52 ஆகச் சரிந்து முடிந்தது.

தொடர்ந்து இன்று (செப். 11, வெள்ளிக்கிழமை) ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 95.70 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர இடையே 95.79 என வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைவிட 27 பைசா சரிந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் ரூபாயின் மதிப்பு இதுவே குறைவாகும்.

பங்குச்சந்தையை பொருத்தவரை, இந்த வாரத்தின் முதல் 3 நாள்கள் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்த நிலையில் நேற்று (செப். 10) சற்று உயர்வுடன் முடிந்தன. தொடர்ந்து இன்று (செப். 11) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

summary

Rupee Falls to 95.79 Against US Dollar Amid Oil, Outflows

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments