FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!

சென்செக்ஸ் 332.63 புள்ளிகள் உயர்ந்து 74,336.45 புள்ளிகளாகவும், நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 23,217.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 5:52 pm IST
பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: நேற்றைய அமர்வில் கடுமையாகச் சரிந்த நிலையில், மதிப்பு சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதன் எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று மீண்டன.

நேற்று ஏற்பட்ட கடுமையான சரிவைத் தொடர்ந்து, பேங்க் நிஃப்டி இந்த மீட்சிக்கு வழிவகுத்த நிலையில், வங்கிப் பங்குகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கியப் பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தின் அடிப்படையில், இந்தியப் பங்குகள் சீரான மீட்சியைப் பதிவு செய்தன.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 502.04 புள்ளிகள் உயர்ந்து 74,505.86 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 332.63 புள்ளிகள் உயர்ந்து 74,336.45 புள்ளிகளாக வர்த்தகமான நிலையில், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 23,217.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு மாற்றமின்றி முடிவடைந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு சிறிதளவு சரிவுடன் நிறைவடைந்தன.

துறைகளைப் பொறுத்தவரை, ஐடி பங்குகள் 1.5 சதவீதம் மற்றும் மருந்துவ துறை சரிவுடனும் வர்த்தகமான நிலையில் மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. இதில் எஃப்எம்சிஜி மற்றும் பொதுத்துறை வங்கித் துறைகள் தலா 1% க்கும் மேல் ஏற்றம் கண்டது.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் உயர்வாக வர்த்தகமான நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 2,977.86 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது ரூ. 95.95 என்ற அளவில் நிலைபெற்றது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.83 சதவீதம் சரிந்து 107.8 டாலராக உள்ளது.

புதிய பங்குகள் வெளியீடு

கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ், பங்கு ஒன்றுக்கு ரூ. 632 என்ற வெளியீட்டு விலைக்கு நிகராக நிஃப்டி-யில் பங்கு ஒன்றுக்கு 8 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் ரூ.685.50 என்ற நிலையில் அறிமுகமான பிறகு 19.3% உயர்ந்து ரூ. 754 ஆக நிறைவடைந்தன.

கிளாஸ் வால் சிஸ்டம்ஸ் பங்குகள், பங்கு ஒன்றுக்கு ரூ.182 என்ற ஐபிஓ விலைக்கு நிகராக நிஃப்டி-யில் சுமார் 7 சதவீத பிரீமியத்துடன் ரூ.194 என்ற விலையில் பட்டியலிடப்பட்ட பிறகு, 18.7% உயர்ந்து ரூ.216 ஆக நிறைவடைந்தன.

summary

Market benchmark indices Sensex and Nifty rebounded on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments