FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு இலவச சர்வதேச ரோமிங் சலுகையை அறிவித்த வோடஃபோன் ஐடியா!

தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் மற்றும் என்டர்பிரைஸ் திட்டங்களுடன் இலவச சர்வதேச ரோமிங் சலுகையை அறிவித்து வோடஃபோன்.

25 செப்டம்பர் 2026, 10:13 pm IST
வோடஃபோன் - ஐடியா - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் மற்றும் என்டர்பிரைஸ் திட்டங்களுக்கு இலவச சர்வதேச ரோமிங் சலுகையை அறிவித்ததுடன், இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் ரோமிங் அணுகலை கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக தெரிவித்தது.

தகுதியான திட்டங்களைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள், ரூ.501 முதல் தொடங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள், வருடாந்திர அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் ரூ.451 முதல் தொடங்கும் கார்ப்பரேட் திட்டங்கள் மூலம் இலவச சர்வதேச ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.

போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் மற்றும் என்டர்பிரைஸ் திட்டங்களுடன் இலவச சர்வதேச ரோமிங் பலனை அறிவித்த வோடஃபோன் ஐடியா, இனி வாடிக்கையாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகில் பயணம் செய்யும்போது இலவசமாகத் தொடர்பில் இருக்க முடியும் என்றது.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் அடிப்படையில், போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் மற்றும் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர்கள், மாறுபட்ட சர்வதேச டேட்டா ஒதுக்கீடுகள் மற்றும் வெளிச்செல்லும் நிமிடப் பயன்பாட்டுடன், ஒரு வருடத்தில் மூன்று பயணங்கள் வரை இலவச சர்வதேச ரோமிங்கைப் பெறலாம் என்றது.

summary

Telecom operator Vodafone Idea on Friday announced a free international roaming offer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments