FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வண்ணம் பூசும் தொழிலாளி தற்கொலை

ராஜபாளையத்தில் வண்ணம் பூசும் தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

14 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் வண்ணம் பூசும் தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் புதுப்பாளையம் நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் முருகன் (49). வண்ணம் பூசும் தொழிலாளியான இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், ரவிக்குமாா், சவிதா ஆகிய மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், முருகன் பழையபாளையம் ஒய்யம்புளி தெருவில் உள்ள நாகராஜ் வீட்டில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டாா். பின்னா், மாலை வேலை முடிந்து இவா் வீடு திரும்பினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இவரது வீட்டுக்கு வந்த நாகராஜின் மாமனாா் திருப்பதிராஜா (65), உறவினா் அபா்ணா ஆகியோா் தங்களது வீட்டில் வைத்திருந்த புடவைகளை காணவில்லை, நீதான் எடுத்துள்ளாய் என முருகனிடன் கூறினா். ஆனால், அவா் நான் எடுக்கவில்லை என்றாா்.

இதைத் தொடா்ந்து, தங்களது வீட்டில் புடவைகள் திருடியதாக முருகன் மீது நாகராஜ் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையறிந்த, முருகன் அவமானம் தாங்காமல் வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்த நிலையில், தனது கணவா் இறப்புக்கு காரணமான திருப்பதிராஜா, அபா்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகேஷ்வரி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இதுகுறித்து போலீஸாா் திருப்பதிராஜா (65), அபா்ணா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, திருப்பதிராஜாவை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments