FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இணையம் ஸ்பெஷல்

புதிய ஆதார் செயலி! லாக், அன்-லாக் செய்வது எப்படி?

புதிய ஆதார் செயலியில், ரேகை, கருவிழி கொண்டு அடையாளத்தை உறுதி செய்யும் வசதியை லாக், அன்-லாக் செய்வது பற்றி..

Updated On : 21 ஜூலை 2026, 5:02 pm IST
புதிய பல வசதிகளுடன் வந்துள்ளது ஆதார் செயலி
பகிர்:

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு, எண்ணற்றோரின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஆதார் செயலி மூலம் மக்கள் தங்களுடைய அடையாள விவரங்களை பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1.91 கோடி பேர், தங்களுடைய கைவிரல் ரேகை மற்றும் கருவிழி மூலம் ஆதார் அடையாளங்களை லாக், அன்-லாக் செய்யும் வசதியை பயன்படுத்தியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எப்போது தேவையோ, அப்போது, ஆதார் செயலி மூலமாகவே, தங்களுடைய ஆதார் அட்டை விவரங்களை லாக் செய்யும், அன்-லாக் செய்யவும் முடியும் என்பது வரவேற்கத் தக்கதாக மாறியிருக்கிறது.

Advertisement

Advertisement

கையில், செல்போன் இருந்து, அதில் ஆதார் செயலியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைவிரல் ரேகை, கருவிழி மூலம் தங்களது ஆதார் அடையாள விவரங்களை லாக் செய்யலாம், அன்-லாக் செய்யலாம்.

செயலியில் ஆதார் விவரங்களை லாக் செய்ய கைவிரல் ரேகை, கருவிழி, முக அடையாளங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு ஆதார் அடையாளங்கள் லாக் செய்யப்பட்டுவிட்டால், இந்த மூன்று விவரங்களை வைத்து, ஒருவர் தன்னுடைய ஆதார் அடையாளத்தை பரிசோதித்து உறுதி செய்ய முடியாது.

தன்னுடைய பயோமெட்ரிக் அடையாளத்தை வைத்து வேறு யாரேனும் மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது என்று கருதினால் இவ்வாறு செய்து கொள்ளலாம். ஒரு ஆதார் எண்ணை வைத்து, அவரது அடையாள விவரங்களை யாராலும் சரி பார்க்க முடியாது.

ஆதாரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செல்போன் எண்ணில் ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து இதனை லாக் செய்து கொள்ளலாம்.

தன்னுடைய ஆதார் விவரங்களை யாரும் சரி பார்க்க வேண்டாம் எனும் பட்சத்தில் இதனைப் பயன்படுத்தலாம். சரி அவ்வாறு யாரேனும் அடையாளத்தை உறுதி செய்ய முயன்றால், அவர்களுக்கு330 என்ற குறியீடு காட்டும். அது, ஒருவர் பயோ மெட்ரிக் விவரங்களை லாக் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார் என்பதை குறிக்கும்.

யாருக்காவது ஆதார் அட்டை கொடுத்து, அதில் கருவிழி, கைரேகை போன்றவை மூலம் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றால், செயலியில் அன்-லாக் செய்ய வேண்டும்.

லாக் செய்வது எப்படி?

புதிய ஆதார் செயலியில் எம்பின் எண்ணைப் பதிவிடவும்.

பயோமெட்ரிக் அன்லாக்டு என்பதை சொடுக்கவும்.

அதில் கம்பார்ம் பயோமெட்ரிக் லாக் என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் பயோ மெட்ரிக் விவரங்கள் லாக் செய்யப்பட்டுவிட்டன. இதே முறையில் அன்-லாக் செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு - ஒரு வேளை, செல்போன் தொலைந்துவிட்டால், இந்த செயலியை மீண்டும் பயன்படுத்தும் அனுமதி பெறாமல், ஆதார் விவரங்களை எங்கேயும் சரிபார்த்து உறுதி செய்ய இயலாது.

summary

New Aadhaar App! How to lock and unlock? Why?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments