FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஒலிம்பிக் வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்?

பாலியல் குற்றச்சாட்டால், ஒலிம்பிக் பயிற்சியாளர் ஒருவருக்கு கட்டாய விடுப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 13 டிசம்பர் 2024, 10:05 pm IST
பகிர்:

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.

பையத்லட்டுகள் பலர் அளித்த குற்றச்சாட்டை விசாரிக்க, அமெரிக்க பையத்லான் (U.S. Biathlon) உறுப்பினர்களுக்கு அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆணையம் (USOPC) மின்னஞ்சல் அனுப்பியது. மின்னஞ்சல் செய்தியில், பயிற்சியாளர் ஒருவர் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், புகார் அளித்த வீரர்களின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பயிற்சியாளரின் பெயர் விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. விசாரணை நடக்கும்போது கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று யுஎஸ்ஓபிசி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பயிற்சியாளர் கேரி கோலியண்டர் மீது வில் வீராங்கனை கிரேஸ் பௌடோட் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தனது 15 ஆவது வயதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கேரி மீது கிரேஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிரேஸ், தனது 18 ஆவது வயதில் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்தபோதும், அவருக்கு கேரி மிரட்டல் விடுத்துள்ளார். தனது பையத்லான் கனவு பாழாகி விடும் என்ற அச்சத்துடனேயே கிரேஸ் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிரேஸ் மிகுந்த மனச்சோர்வில் இருப்பதை அறிந்த மருத்துவர், கிரேஸுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்துமாறு கேரியிடம் கூறியுள்ளார். இருப்பினும், மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கிரேஸ், 2010 ஆம் ஆண்டு, அக்டோபரில் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும், அங்கிருந்த சக விளையாட்டு வீரரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிரேஸ் காப்பாற்றப்பட்டார்.

அடுத்த நாளிலேயே, கேரி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில், நோர்டிக் பனிச்சறுக்கு உயர் செயல்திறன் இணை இயக்குநராக அமெரிக்க பாராலிம்பிக் அணியால் பணியமர்த்தப்பட்டார். பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ஒலிம்பிக் வீரர் ஜோன் ரெய்ட் சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பல விளையாட்டு வீராங்கனைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments