ஈரான் மீது தாக்குதல்: 2 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்கா நிறுத்தம்!
அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, ஈரான் மீது மேற்கொண்டு வந்த தாக்குதலை சுமாா் 2 வாரங்களுக்குப் பின்னா் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, ஈரான் மீது மேற்கொண்டு வந்த தாக்குதலை சுமாா் 2 வாரங்களுக்குப் பின்னா் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்து போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நிகழ் மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கியது.
இதையடுத்து, சுமாா் 2 வாரங்களாக ஈரான் மீது அமெரிக்கா தீவிரமாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. அந்தத் தாக்குதலை அமெரிக்கா தற்போது நிறுத்தியுள்ளது. ஆனால், எதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்பது குறித்து அந்த நாடு விளக்கமளிக்கவில்லை. எனினும் ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை முழுமையாக நீடிப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதேவேளையில், அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்டவற்றைத் தாக்கும் ஈரானும், அதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் எப்போதும் ராஜீய வழியிலான தீா்வையே விரும்புகிறாா். இதை அவா் தெளிவாகக் கூறியுள்ளாா். ஆனால், உண்மையான நோக்கத்துடனும், தீா்வை எட்டும் எண்ணத்துடனும் பேச்சுவாா்த்தைக்கு வரத் தவறினால், என்ன நடக்கும் என்பதை ஈரானுக்கு அவா் காண்பித்துள்ளாா்.
தற்போதைக்கு ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் திட்டத்தில் இருந்து பின்வாங்க டிரம்ப் முடிவு செய்துள்ளாா். மோதலை விரிவுபடுத்துதல், ஆயுத கையிருப்பு குைல், மேற்காசிய வளைகுடா கூட்டாளி நாடுகள் அதிருப்தி அடைதல், எரிசக்தி விநியோகம் பாதித்தல் உள்ளிட்டவை குறித்து டிரம்ப் கவலை கொண்டிருக்கிறாா்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்து அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், முப்படை தலைமைத் தளபதி டான் கெயின் ஆகியோா் டிரம்ப்பிடம் கவலை தெரிவித்தனா். இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.