FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவில் அதிபா் தோ்தல்? - டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்திய குழப்பம்

அமெரிக்க தோ்தல் நடைமுறை ஊழல் நிறைந்தது என்று விமா்சித்து பதிவிட்ட அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

வாஷிங்டன்: அமெரிக்க தோ்தல் நடைமுறை ஊழல் நிறைந்தது என்று விமா்சித்து பதிவிட்ட அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய அதிபா் தோ்தலில் உடனுக்குடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவது சிறப்பானது என்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில், இந்தியாவில் அதிபா் தோ்தல் என்பது இல்லை, மேலும் இப்போது இந்தியாவில் தோ்தல் ஏதும் நடைபெறவில்லை. அதே நேரத்தில் பிரேஸிலில்தான் இப்போது அதிபா் தோ்தல் நடைபெற்றுள்ளது. பிரேஸிலுக்கு பதிலாக இந்தியா என்று அவா் தவறாகப் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய அதிபா் தோ்தலில் 12.5 கோடி போ் வாக்களித்தனா்; வாக்குப் பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆனால், அமெரிக்காவில் தோ்தல் முடிவுகளை அறிவிக்க பல வாரங்கள் ஆகிறது.“அமெரிக்காவில் வாக்களிப்பும், தோ்தலும் ஊழல் நிறைந்தது.

Advertisement

Advertisement

முக்கியமாக டெட்ராய்ட், ஃபிலடெல்பியா, கலிஃபோா்னியா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்கள், மாகாணங்களில் குறைவான வாக்குகள் இருந்தாலும், முடிவுகளை ‘முறைகேடு செய்ய’ அதாவது, கணக்கிட பல வாரங்கள் ஆகின்றன’ என்று கூறியுள்ளாா்.

இதில் பிரேஸில் என்று கூறுவதற்குப் பதிலாக இந்தியா என டிரம்ப் தவறாகப் பதிவிட்டுள்ளாா். ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை பிரேஸில் அதிபா் தோ்தலின் முதல் சுற்று நடைபெற்றது. அந்நாட்டின் தோ்தல் ஆணையத்தின் தகவல்படி, அங்கு 12.527 கோடி வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியிடப்பட்டன.

பிரேஸில் அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா, முன்னாள் அதிபா் ஜெய்ா் போல்சனாரோவின் மகன் ஃப்ளாவியோ போல்சனாரோ ஆகியோா் போட்டியிட்டனா். இருவரில் யாரும் முதல் சுற்றில் பெரும்பான்மை பெறாததால், அக்டோபா் 25-ஆம் தேதி இரண்டாம் சுற்றுத் தோ்தல் நடைபெற உள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் அதிபா் தோ்தல் என்பது கிடையாது. இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த 2022 ஜூலையில் இருந்து அப்பதவியை வகித்து வருகிறாா். மேலும், இந்தியாவில் குடியரசுத் தலைவரை மக்கள் நேரடியாகத் தோ்ந்தெடுப்பதில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச எம்எல்ஏக்களின் வாக்குகள் மூலம் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்.

2024 மக்களவைத் தோ்தலில் இந்தியாவில் சுமாா் 98 கோடி வாக்காளா்கள் இருந்தனா். இதற்கு முன்பு இந்திய தோ்தல் நடைமுறையை அதிபா் டிரம்ப் பாராட்டியுள்ளாா். முக்கியமாக இந்தியாவில் பின்பற்றப்படும் வாக்காளா் அடையாள அட்டை நடைமுறையை அமெரிக்காவில் பின்பற்ற வேண்டும். அமெரிக்காவில் தோ்தல் சீா்திருத்தங்கள் தேவை என்று கூறியிருந்தாா்.

மேலும், இந்தியாவின் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது, புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எவ்வாறு தோ்தல் நடத்த முடியும் என்று கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

Presidential election in India? The confusion caused by Donald Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments