FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மழலையர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 16 வயது சிறுவன்; 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

அமெரிக்காவில் மழலையர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து...

16 அக்டோபர் 2026, 3:12 pm IST
மழலையர் பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு - AP
பகிர்:

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் மழலையர் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமையில் (இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில்) இந்தப் பள்ளி அருகே அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக காவல்துறையின் அவசர உதவி எண் 911-க்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்குள் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அடுத்தடுத்து தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவ இடத்துக்கு காவல்துறை சென்ற நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 16 வயதுடைய சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான்.

Advertisement

Advertisement

விசாரணையில் 16 வயது சிறுவன் சாலையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதும், சுடப்பட்டவர்தான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பள்ளிக்குள் சென்ற 16 வயது சிறுவன், பள்ளியில் படித்து வந்த 5, 8, 11 வயதுடைய 3 குழந்தைகளையும் ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 7 வயது சிறுவனும், மற்றோர் ஆசிரியரும் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே, சிறுவன் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்துவதைக் கண்டு, பள்ளியில் இருந்த ஒருவர் சிறுவனைச் சுட்டு வீழ்த்தினார் என விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பள்ளியில் இருந்த குழந்தைகள் தற்காலிகமாக அருகிலிருந்த தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, பள்ளியின் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள 32 பள்ளிகளிலும் இன்றைய (அக். 16) வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய சிறுவன், பள்ளியில் படித்தவரா அல்லது பள்ளியில் இருக்கும் யாருக்கும் பழக்கமானவரா என விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்தாண்டில் துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்பட்ட 28-வது படுகொலை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

summary

Shooter kills three children and one teacher at Oregon elementary school

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments