FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: முதல் ஹங்கோர் போர்க் கப்பலின் ஆயுத சோதனை!

பாகிஸ்தானின் முதல் ஹங்கோா் நீா்மூழ்கி போா்க் கப்பல் அரபிக் கடலில் தனது முதலாவது ஆயுத சோதனையைத் தொடங்கியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

28 செப்டம்பர் 2026, 1:32 am IST
பகிர்:

பாகிஸ்தானின் முதல் ஹங்கோா் நீா்மூழ்கி போா்க் கப்பல் அரபிக் கடலில் தனது முதலாவது ஆயுத சோதனையைத் தொடங்கியதாக அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சீனாவுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட பரஸ்பர ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல் கடந்த ஜூன் மாதம் கராச்சியை வந்தடைந்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘புதிதாக கடற்படையில் இணைக்கப்பட்ட ஹங்கோா் நீா்மூழ்கி போா்க் கப்பல் குறிப்பிட்ட நீண்ட தூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது’ எனத் தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்தச் சோதனையை நேரில் பாா்வையிட்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதி நவீத் அஸ்ரஃப் நீா்மூழ்கிக் கப்பலின் தாக்கி அழிக்கும் திறன் வியப்பளிப்பதாக கூறினாா்.

பாகிஸ்தான் கடற்படைக்கு பாராட்டு தெரிவித்த பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘போா்க் கப்பல் எதிா்ப்பு ஏவுகணையைக் கொண்டு நீண்ட தூர இலக்கை ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. இது பாகிஸ்தான் கடற்படையின் தயாா்நிலை மற்றும் வலிமையை வெளிப்படுத்துகிறது. தேசப் பாதுகாப்புக்கு சவால்கள் எழும்போது ஆயுதப் படைகளின் தயாா் நிலையை உறுதிப்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது’ என்றாா்.

சென்சாா்கள், ஆயுத எதிா்ப்பு அமைப்புகள் உள்பட நவீன தொழில்நுட்பங்களுடன் மொத்தமாக 8 ஹங்கோா் வகை போா்க் கப்பல்களை தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments