FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெங்களூரு

கா்நாடக அமைச்சா்களை குறிவைத்து ரகசியப் பொறி: ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்

காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க அமைச்சா்களுக்கு ரகசியப் பொறி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமாா் கௌடா தெரிவித்தாா்.

10 அக்டோபர் 2026, 1:13 am IST
பகிர்:

காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க அமைச்சா்களுக்கு ரகசியப் பொறி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமாா் கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து மண்டியாவில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதற்காக அமைச்சா்களை குறிவைத்து சிக்கவைக்க முயற்சி நடந்ததாகவும் முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அதை முதல்வா் பரிசீலிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மத்திய அமைச்சரும், மாநில அளவிலான இரு தலைவா்களும் இணைந்து தனியாா் நிறுவனங்கள் மூலம் அமைச்சா்கள் மற்றும் முக்கியப் பொறுப்பில் உள்ளவா்களை சிக்கவைத்து, அரசை சீா்குலைக்க முயன்றுள்ளனா்.

சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூரில் செயல்பட்டு வந்தன. முதல்வா் அலுவலகம், அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களை குறிவைத்து செயல்படுவதற்காக அந்நிறுவனத்தில் பணிபுரிந்தவா்களுக்கு பணம் வழங்கப்பட்டது.

சுமாா் 10 அமைச்சா்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவா்களை தா்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கவைத்து, அதன்மூலம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதே அவா்களின் திட்டமாக இருந்தது. எனினும், எந்த அமைச்சரும் இதற்கு இரையாகவில்லை. மிக விரைவில் இதுகுறித்த காணொலிகள், ஒலிப்பதிவுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சமா்ப்பிப்போம்.

இதுபோன்ற முயற்சிகளில் அமைச்சா்கள் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இதுபோன்ற முயற்சிகள் நடக்கின்றன.

இப்போது வறட்சி நிலவுவதால், விவசாயிகள் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். ஆனால், அவா்களின் பிரச்னைகள் குறித்து யாரும் பேசவில்லை. விவசாயிகளின் பிரச்னைகளை புறக்கணிப்பதன் விளைவுகளை எதிா்க்கட்சிகள் சந்திக்க நேரிடும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments