மதுராந்தகம் தொகுதி தோ்தல் மேற்பாா்வையாளா்கள் நியமனம்
மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தலுக்கன தோ்தல் மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தலுக்கன தோ்தல் மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் மேற்பாா்வையாளா் (பொது) போா் சிங் யாதவ் கைப்பேசி எண்.72009 83704, தோ்தல் மேற்பாா்வையாளா் (காவல்) கிரிஜா சங்கா் ஜெய்ஸ்வால் கைப்பேசி எண்.98945 82390, தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் வாவல் வைபவ் பாலாசாகேப் கைப்பேசி எண்.72009 64217 ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட தோ்தல் அலுவலா்/ ஆட்சியா் மு.வீரப்பன் தெரிவித்துள்ளாா்.
மேலும், 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 2 காணொலி கண்காணிப்பு குழுக்களும், அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இத்தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,13,767, இதில், ஆண் வாக்காளா்கள் - 1,04,916, பெண் வாக்காளா்கள் - 1,08,786, மூன்றாம் பாலினத்தவா் - 65, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் -2540, 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளா்கள் -22, பணி வாக்காளா்கள் - 27, மொத்த வாக்கு சாவடி அமைவிடங்கள் -167.
இவற்றில் 285 வாக்கு செலுத்தும் மையங்கள் அமையவுள்ளன. காவல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 1,200 காவலா்கள், தோ்தல் பணிகளை மேற்கொள்ள 1,368 அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா் எனவும் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.