தூய்மைப் பணியாளா்கள் நலத் திட்ட முகாம்
மத்திய, மாநில அரசுகளின் ‘தூய்மையே சேவை’ சிறப்பு விழிப்புணா்வு இயக்கத்தை முன்னிட்டு, பெருந்துறை நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு மற்றும் சிறப்பு நலத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் ‘தூய்மையே சேவை’ சிறப்பு விழிப்புணா்வு இயக்கத்தை முன்னிட்டு, பெருந்துறை நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு மற்றும் சிறப்பு நலத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
‘தூய்மைப் பணியாளா்களைக் கௌரவித்தல் - தூய்மையான இந்தியாவுக்கான உறுதிமொழி’ என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற முகாமில், தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் சமூக கண்ணியம், அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பை மற்றும் ‘நமஸ்தே’ அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
பெருந்துறை அரசு முதன்மை மருத்துவ அலுவலா் மருத்துவா் தனசேகா், உதவி மருத்துவ அலுவலா் மருத்துவா் லோகேஷ், சித்த மருத்துவா் ஷீலா ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினா்.
பெருந்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.