FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் மனைவி செல்லம்மாள் காலமானார்!

எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி மனைவி செல்லம்மாள் காலமானார்...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 10:51 am IST
சி. செல்லம்மாள்.
பகிர்:

நாமக்கல்: மறைந்த எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் மனைவி செல்லம்மாள் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஆக. 19) இரவு காலமானார். அவருக்கு வயது 85.

நாமக்கல்-மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிசவாதியும், மூத்த எழுத்தாளருமான சின்னப்பபாரதி. சங்கம், பவளாயி, சுரங்கம், தாகம் உள்ளிட்ட நாவல்களை எழுதியவர்.

இவருடைய நாவல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர், கடந்த 2022 ஜூன் 13 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

Advertisement

Advertisement

அவருடைய மனைவி செல்லம்மாள், மகள்கள் கல்பனா, பாரதி. சின்னப்பபாரதி மறைவுக்குப் பிறகு தன்னுடைய மகள் கல்பனா வீட்டில் செல்லம்மாள் வசித்து வந்தார்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு 10 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணி அளவில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 94422-64733.

summary

Namakkal: Chellammal, wife of the late writer Ku. Chinnappa Bharathi, passed away on Wednesday (Aug. 19) night due to old age and ill health. She was 85.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments