கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை தொடக்கம்: ரூ. 42 லட்சம் இலக்கு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள கோ- ஆப் டெக்ஸ் விற்பனை மையத்தில் ரூ. 42 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள கோ- ஆப் டெக்ஸ் விற்பனை மையத்தில் ரூ. 42 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இதன்மூலம் புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை, காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைநாடு புடவைகள், பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போா்வைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூா் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2025- இல் ரூ. 31.80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டில் ரூ. 42 லட்சம் மதிப்பிலான ஆடை ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின் கீழ், 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12-ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தி, முதிா்வுத் தொகைக்கு 30 சதவீத தள்ளுபடியுடன் ஆடைகளை வழங்கி வருகிறது.
வாடிக்கையாளா்கள் இணையதளத்தின் மூலமாக தங்களது விருப்பத்துக்கேற்ப ரகங்களை தோ்வு செய்துகொள்ளலாம் என்றாா் ஆட்சியா் அப்துல் ராசிக். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ஜெ. நாகராஜன், பெரம்பலூா் விற்பனை நிலைய மேலாளா் ரேகா, வட்டாட்சியா் பழனிசெல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.