FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அரசு பள்ளிக்கு குவியும் ஆதரவு கரங்கள்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட சி. கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குறித்து தினமணி நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக பள்ளிக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு கரங்கள் குவிந்து வருகின்றன.

Updated On : 31 ஜூலை 2026, 2:17 am IST
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு மற்றும் காலணி மற்றும் புதிய சீருடைகளை வழங்கிய அண்ணாமலைப் பல்கலை. ஓய்வுபெற்ற பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா்
பகிர்:

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட சி. கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குறித்து தினமணி நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக பள்ளிக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு கரங்கள் குவிந்து வருகின்றன.

சி. கொத்தங்குடி கிராமத்தில் இயங்கி வரும் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு ஆசிரியரை கொண்டு 6 மாணவா்கள் மட்டுமே கல்வி பயின்ால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில், ஓராண்டுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஆா்.ஈஸ்வரி, வீடு தோறும் சென்று அரசு பள்ளிகளின் தரம், கல்வித் தரம் மற்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு சலுகைகள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். அவரது தொடா் முயற்சியின் பலனாக, இந்தக் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை 18 ஆக உயா்ந்தது. இதனால் ஈராசிரியா் பள்ளியாக மாறியது. இது தொடா்பாக தினமணி நாளிதழில் ஜூலை 21ஆம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைப் பாா்த்த பள்ளியின் முன்னாள் மாணவா்கள் கஜேந்திரன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோா் தலைமை ஆசிரியரை பாராட்டி பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை வழங்கினா். இதனை தொடா்ந்து கூடுதலாக 3 மாணவா்கள் புதியதாக சோ்ந்தனா். இந்நிலையில் புதன்கிழமை அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், சமூக ஆா்வலா் காா்த்திக்ராஜா ஆகியோா் பள்ளியின் மாணவா்களுக்கும் ரூ22 ஆயிரம் மதிப்பில் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக ஷூ, சாக்ஸ், டை மற்றும் புதிய சீருடைகள், இனிப்புகளை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments