முகப்பு
செய்திகள்

‘அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?’- ரசிகர்கள் கிண்டல்! 

இயக்குநர் எச்.வினோத்துக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவமில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Updated On : 5 டிசம்பர் 2022, 3:12 pm IST
பகிர்:

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இயக்குநர் எச். வினோத் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வலிமை படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றதாக கூறியுள்ளார். மேலும் ட்விட்டர், யூடியூபில் காசு வாங்கிக்கொண்டு போலியான தகவல்களை சொல்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். 

Advertisement

இதற்கு  “அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?” என வலிமை படத்தின் வசனங்களை விஜய் ரசிகர்கள் இயக்குநர் வினோத்தை கிண்டல் செய்து வருகின்றனர். இயக்குநருக்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் குணம் இல்லையெனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள், “நான் வேணுமா உன் இடுப்ப புடிச்சிக்கிட்டுமா?” என பீஸ்ட் படத்தின் வசனங்களை கிண்டல் செய்து வருகின்றனர். 

இயக்குநரின் இந்த பேட்டியை வைத்து அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொள்கிறார்கள். 

துணிவு படத்தின் பிரத்யோகமான அஜித்தின் படங்களும் சென்னை டைம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.