‘டிரைவர் ஜமுனா’ படத்தின் முன்னோட்ட விடியோ வெளியானது!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி. கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சாலை பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது படம் டிச.30ஆம் நாள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.