'இந்தியன் 2' படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!
இந்தியன் 2 படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது.
ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிரூத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடி வசூலைத் தாண்டியதால் தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் தீவிரமாக வாள் சண்டை கற்றுக்கொண்ட விடியோ சமீபத்தில் வெளியானது.
தற்போது இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இணைந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கேமிராவுக்கு பின்புறம் இருக்கும் அனைத்து நாயகர்களுக்கும் மிகுந்த மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக காட்டியதற்காக ஒப்பனையாளருக்கு நன்றி. பஞ்சாபின் சிங்கம் இந்தியன் 2 படத்தில் ஜெலெண்ட் கமலுடன் இணைவதற்கு தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.