முகப்பு
செய்திகள்

‘கண்ணீர் விலை மதிக்க முடியாதது’ - வாரிசு படம் பார்த்து அழுத இசையமைப்பாளர்! 

வாரிசு படம் பார்த்து மிகவும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டதாக இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
பகிர்:

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. 

இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரசுடு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.

தற்போது இசையமைப்பாளர் தமன் படத்தினைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது: 

விஜய் அண்ணா...படத்தில் வரும் அனைத்து எமோஷனல் காட்சிகளை பார்க்கும்போது அழுதேன் அண்ணா. கண்ணீர் என்பது விலைமதிப்பில்லாதது. வாரிசு படம் எனது குடும்ப திரைப்படம் அண்ணா. இது என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்தற்கு மிக்க நன்றி அண்ணா.  லவ் யூ அண்ணா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.