லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி!
லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி என இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக முதல்நாள் வசூலைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சம்பளம் போதும்; பட வெற்றிக்காக பரிசுகள் தேவையில்லை: நடிகர் விஜய்
Advertisement
Advertisement
ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் நாயகன், இயக்குநர்களுக்கு கார் அல்லது பரிசுத் தொகை தரும் பழக்கம் விக்ரம், ஜெயிலர் படங்களுக்கு நடந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இதையும் படிக்க: லியோ ரூ.1,000 கோடி வசூலிக்காது: தயாரிப்பாளர் லலித்
நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எனக்கு வசூல் குறித்த பிரச்னைகள் இல்லை. அது எவ்வளவு வசூலீட்டினாலும் எனக்கு கவலை இல்லை. நஷ்டம் வராமல் இருந்தால் போதும். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கேட்டால் நான் பட வெற்றிக்காக எனக்கு ஹெலிகாப்டர் வேண்டுமென கேட்பேன்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படிக்க: மருத்துவமனையில் நடிகை சுனைனா: ரசிகர்கள் அதிர்ச்சி!
மேயாத மான், ஆடை, குளு குளு ஆகிய படங்களின் இயக்குநரும் மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வசனகர்த்தாவும் ஆகிய ரத்னகுமார் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
படம் முதல்நாளில் ரூ.148.5 கோடி வசூலித்ததால் ரத்னகுமார், “லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.