FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அரசியல் கேள்வி கேட்காதீங்க! நடிகர் ரஜினி

உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினியின் பதில்.

Updated On : 20 செப்டம்பர் 2024, 10:47 am IST
நடிகர் ரஜினி - கோப்புப்படம்
பகிர்:

அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சென்னைக்கு இன்று காலை நடிகர் ரஜினி வந்தடைந்தார்.

Advertisement

Advertisement

அரசியல் கேள்வி வேண்டாம்

சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்த கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு, அரசியல் கேள்வி கேட்காதீங்கனு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று ரஜினி பதிலளித்தார்.

மேலும், வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், இசைவெளியீட்டு விழாவில் யார்யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்து சென்றார்.

வேட்டையன் இசைவெளியீட்டு விழா

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அக். 27-ல் த.வெ.க. மாநாடு! விஜய் அறிவிப்பு

நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments