FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுதந்திர நாள்! முதல்முறை கொடியேற்றிய மே.வங்கம், கர்நாடகம், கேரளத்தின் புதிய முதல்வர்கள்!

சுதந்திர நாளை முன்னிட்டு மேற்கு வங்கம், கர்நாடகம் மற்றும் கேரளத்தின் புதிய முதல்வர்கள் முதல்முறையாகக் கொடியேற்றம்...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 11:13 am IST
தேசியக் கொடி ஏற்றிவைத்த கேரள முதல்வர் வி.டி. சதீசன் - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - எக்ஸ்
பகிர்:

சுதந்திர நாளை முன்னிட்டு மேற்கு வங்கம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் புதிய முதல்வர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளனர்.

நாட்டின் 80 ஆவது சுதந்திர நாள் நாடு முழுவதும் இன்று (ஆக. 15) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநில முதல்வர்களும் தங்களின் தலைமைச் செயலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட மேற்கு வங்கம், கேரளம் மற்றும் பதவிமாற்றம் ஏற்பட்ட கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் புதிய முதல்வர்கள் தங்களின் தலைநகரங்களில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர நாள் விழாவை தொடங்கிவைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, சுதந்திர நாளை முன்னிட்டு கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் இன்று காலை முதல்வர் சுவேந்து அதிகாரி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள டி.கே. சிவகுமார் மாநில தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி சுதந்திர நாள் கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

இதேபோல், கேரளத்தில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசின் முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், கேரளம், கர்நாடகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர்கள் சுதந்திர நாளை முன்னிட்டு தேசியக் கொடியேற்றியுள்ளது பெருமளவில் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Marking Independence Day, the new Chief Ministers of West Bengal and Kerala have hoisted the national flag.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments