முகப்பு
இந்தியா

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

மாணவர்கள் - படம் - பிடிஐ
பகிர்:

அவசரப்பட வேண்டாம்: ஈரானுடன் அமைதி பேச்சுவர்த்தைக் குழுவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்!

மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி!

summary

மேற்கு வங்கம்: பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு!

ஜன நாயகன் புதிய வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் பதில்!

summary

ஜன நாயகன் ஜூன் 3-ஆவது வாரம் வெளியாக வாய்ப்பு...

உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!

summary

ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை 3-ஆவது முறையாகப் பயன்படுத்திய ரஷியா!

Advertisement

Advertisement

நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்!

summary

அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தல்

தொண்டர்களைக் குழப்பும் திருமா: விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல் !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகினார்.

மும்பை அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 205 ரன்கள் குவித்துள்ளது.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு கே.என்.நேரு கண்டனம்

மேக்கேதாட்டு அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புழல் மத்திய சிறையில் அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு!

சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (மே 24) ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமையமாக்க உத்தரவிட்டார்.

யானை அகிலாவுக்கு பிறந்தநாள்: இனிப்புகள், பழங்கள் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர்!

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் யானை அகிலா பிறந்தநாளையொட்டி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் யானைக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!

வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல்

பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 4ஆம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து எம்.பி. மாணிக்கம் தாகூர் விளக்கமளித்துள்ளார்.

சத்தீஸ்கர்: வெப்ப அலைக்கு 200 வௌவால்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரின் கோர்பாவில் கடும் வெப்ப அலை காரணமாக 200 வௌவால்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி

திருச்சியில் சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகம்: நீட் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

கர்நாடகம் மாநிலம் கலபுரகியில், நீட் மறுதேர்வு எழுதயிருந்த மாணவி ஒருவர், தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.

இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா

இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள் என்று அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எதிரொலி: வேலைவாய்ப்பு கோரி மதுரையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணி

படித்த இளைஞர்களுக்கு வேலைகோரி, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து, மதுரை காந்தி அருங்காட்சியகத்திலிருந்து தமுக்கம் தமிழன்னை சிலை வரையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பேரணியில் ஈடுபட்டனர்.

கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

கோவையில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை, முதல்வர் விஜய் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிறுமியை சித்ரவதை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையானவற்றை செய்து தருவதாகவும் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.

கேரளம்: பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை!

கேரளத்தில் பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

செவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

செவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தூங்கா இரவுகளாக மாறிய கொடுமை! மின்வெட்டுக்கு நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!

அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை எனக் குற்றஞ்சாட்டி, கட்சியிலிருந்து முன்னாள் எம்.பி. வேணுகோபால் விலகியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஏறத்தாழ 933 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 8.19 லட்சம் (8,19,372) விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரலாற்றிலேயே முதன்முறையாக, தேர்வு முடிந்த பிறகு, தற்காலிக விடைக்குறிப்புகளையும் தேர்வாணையம் வெளியிடவுள்ளது.

அமெரிக்காவுடன் போர்நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டதா?

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி

சமூகம் தொடர்பான பிரச்னைகளில் வலுவாகக் குரலெழுப்ப காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து குறித்த அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோ

பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு, மாநில அரசு வாழ்நாள் சிறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேற்கு வங்கம்: மறுதேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்த மறுதேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக்கொலை! பாதுகாப்புகள் தீவிரம்!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே, சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தத்தப்பட்டது. அதில் சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.