FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடி

நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக பாஜக அலுவலகங்கள் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறித்து...

39 வினாடிகள் முன்பு
பிரதமர் நரேந்திர மோடி. - படம் - ஏஎன்ஐ
பகிர்:

நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக பாஜக அலுவலகங்கள் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப். 8) பேசினார்.

குஜராத் மாநிலம் நவ்சாரியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இன்று ஒரு புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இது துன்பப்படுபவர்கள் மற்றும் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக மாற வேண்டும். எளியவர்கள் இங்கு வரலாம், அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க யாரும் தயங்கக் கூடாது.

Advertisement

Advertisement

நண்பர்களே, ஒரு கட்டடத்தைக் கட்டுவது கடினமானதல்ல. ஆனால், இந்தக் கட்டடத்தின் வழியாக, நாம் இத்தனை காலம் பாதுகாத்து வந்த பாரம்பரியமும், நாம் எடுத்துக் கொண்ட கொள்கைகளும் ஒரு புதிய பரிமாணத்தை அடைய வேண்டும்.

பிரதமரின் ஸ்வநிதி என்பது, தெருவோர வியாபாரிகளுக்கும், காய்கறிகள், பழைய துணிகளை விற்பவர்களுக்காகவும், பல சிறு வணிகர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட திட்டம்.

நானும் அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். எனக்கும் அந்த வாழ்க்கை தெரியும். பொதுமக்களைக் கடவுளாக, நினைத்து அவர்களுக்காக என்னால் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலிருந்து இது மாதிரியான திடங்கள் உருவாகின்றன.

பாஜகவின் பணிகள் எப்போதும் மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, குஜராத்தின் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 35,000 கோடி திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இன்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

summary

Prime Minister Narendra Modi said on Tuesday (Sept. 8) that BJP offices should serve as a refuge for those denied justice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments