பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதின் குறித்து...
புதுதில்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சி மாநாட்டையொட்டி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை காலை(செப்.11) தில்லி வந்தடைந்தார்.
தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை(செப்.12) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை காலை(செப்.11) தில்லி வந்தடைந்தார்.
தில்லி விமான நிலையம் வந்த புதினை வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாடு புதின் பங்கேற்கிறார்.
2022- இல் உக்ரைன் போர் வெடித்ததில் இருந்தகு, ரஷியாவுக்கு வெளியே நடைபெறும் பிரிகஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல்முறை.
இந்தியா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே 'சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த உத்திசார் கூட்டாண்மை'யின் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்ட நீண்டகால உறவுகள் நிலவுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
Russian President Vladimir Putin has arrived in New Delhi today to participate in the 18th BRICS Summit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.