நாட்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 7.8%! சிறு, குறு நிறுவனங்களே காரணம் - நிர்மலா சீதாராமன்
நாட்டின் முதல் கலாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து...
நாட்டின் முதல் கலாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8% ஆக உயர்ந்ததற்கு தொழில் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உழைப்பே காரணம் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப். 16) தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச வரி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நாட்டின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8% ஆக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கான பெருமையை நானோ எனது அரசாங்கமோ எடுத்துக்கொள்ள முடியாது. இந்த பெருமையை ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். கடின உழைப்பைக் கொடுக்கும் தொழில்துறை மற்றும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்களிப்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். அவர்களின் கடின உழைப்பே அவர்களுக்கு பலன் அளிக்கிறது.
Advertisement
Advertisement
கொள்கைகள்தான் இத்தகைய கட்டமைப்புக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. ரயில்கள் பயணிக்கும் ரயில் பாதைகளுக்கு பங்கு உண்டு. தொழில்துறையினர் தங்கள் துறை சகாக்களோடு பேசி தொடர்பில் இருக்க வேண்டும் என்று எப்போதும் நான் வலியுறுத்தக் காரணம், இந்த துறை எவ்வளவு சவாலானதாக உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காகத்தான். ஆனால், நாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என சிலர் கூறிக்கொண்டு இருப்பதுதான் கவலை அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
India's 7.8% Q1 growth driven by hard work of industry, MSMEs, people FM Sitharaman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.