FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி கலவர வழக்கு! உமர் காலிக், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் ரத்து!

மூன்றாவது முறையாக ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பற்றி..

ஷர்ஜீல் இமாம் | உமர் காலித் - file photo
பகிர்:

வடகிழக்கு தில்லியில் 2020-ல் நடைபெற்ற கலவர வழக்கில் தொடர்பான சமூக ஆர்வலர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கத் தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் பிரதிபா எம். சங் மற்றும் தினேஷ் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் உமர் காலித் மற்றும் இமாம் தாக்கல் செய்திருந்த மூன்றாவது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

நீதித்துறை சார்ந்த நடைமுறை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அமர்வு, பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு நிறைவடைவது அல்லது ஓராண்டுக் காலம் முடிவடைவது இதில் எது முதலில் நிகழ்கிறதோ, அதற்கேற்ப ஜாமீன் கோருமாறு இரு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஜனவரி 5-ஆம் தேதி உத்தரவை மாற்றியமைக்க முடியாது.

Advertisement

Advertisement

நாங்கள் ஜாமீன் வழங்கினால் அது (உச்ச நீதிமன்றத்தின்) உத்தரவை மாற்றியமைப்பதாகிவிடும்; அதைச் செய்ய முடியாது என்று அமர்வு குறிப்பிட்டது.

கைது செய்யப்பட்டதிலிருந்து மூன்றாவது முறையாகத் தங்கள் ஜாமீன் மனுக்களை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் ஜூலை 4-ஆம் தேதி உத்தரவை எதிர்த்து காலித் மற்றும் இமாம் மேல்முறையீடு செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் ஜனவரி 5-ஆம் தேதி உத்தரவைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், எனவே மனுவை பரிசீலிக்கவோ அல்லது எந்த நிவாரணமும் வழங்கவோ முடியாது என்றும் கூறி விசாரணை நீதிமன்றம் ஜாமீன் விண்ணப்பங்களை நிராகரித்திருந்தது.

வழக்கு என்ன?

வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 700 போ் காயமடைந்தனா். இந்தக் கலவரத்தில் மிகப்பெரிய சதி நடந்தது தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம், உமர் காலித் ஆகியோரின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments