FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

செல்லிடப்பேசிக்கு சேதாரமில்லாமல் ஹோலி கொண்டாடுவது எப்படி?

ஹோலி பண்டிகை விரைவில் கொண்டாடப்படவிருக்கிறது. பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து ஹோலி கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

Updated On : 14 மார்ச் 2022, 5:59 pm IST
செல்லிடப்பேசிக்கு சேதாரமில்லாமல் ஹோலி கொண்டாடுவது எப்படி?
பகிர்:


ஹோலி பண்டிகை விரைவில் கொண்டாடப்படவிருக்கிறது. பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து ஹோலி கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

ஹோலி கொண்டாடும் மக்கள் இருக்கும் பகுதிகளில், வீட்டை விட்டு வெளியே வந்தாலே, வண்ணப் பொடிகள் கலந்த நீரை ஊற்றுவார்கள். இது மகிழ்ச்சி அளித்தாலும், கையிலிருக்கும் விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை இதிலிருந்து பாதுகாப்பது எப்படி என்ற அச்சம் உங்களை வாட்டுகிறதா?

வாருங்கள் கவலையைப் போக்கும் வழிகள் என்னவென்று பார்க்கலாம்.

Advertisement

Advertisement

உங்களது இயர்போன்களின் இயர்பட்ஸ்களில் கிளிசரின் அல்லது மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை தடவி வையுங்கள். ஒருவேளை அதில் வண்ணப் பொடிகள் பட்டுவிட்டாலும் லேசான துடைத்தாலே போய்விடும்.

ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்போர், கைவசம் ஸிப்லாக் பேக் அல்லது வாட்டர்ப்ரூஃப் பௌச்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் தண்ணீர் அடித்துக் கொண்டாட்டங்கள் நடக்கிறதோ, அங்கு இந்த பைக்குள் உங்கள் செல்லிடப்பேசிகளை வைத்து விட்டு கவலையின்றி ஆட்டம் பாட்டங்களில் ஈடுபடுங்கள்.

தற்காலிகமாக, செல்லிடப்பேசிகளில் சார்ஜரை நுழைக்கும் இடம் ஸ்பீக்கர் போன்று திறந்திருக்கும் துளைகளில் டேப் கொண்டு ஒட்டி வைத்தும் கொள்ளலாம்.

இதுபோன்று ஸிப் லாக் கவரிலோ, டேப் போட்டு ஒட்டும் போதோ உங்கள் செல்லிடப்பேசிகளை சைலண்ட் மோடில் வைக்கவும். இதுவும் செல்லிடப்பேசியை பாதுகாக்க பெரிதும் உதவும்.

தண்ணீர் ஊற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் போது பயோமெட்ரிக் லாக் பதிலாக பாட்டர்ன் லாப் பயன்படுத்துங்கள். உங்கள் கைகள் ஈரமாக இருக்கும் போது பயோமெட்ரிக் பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம்.

ஒருவேளை, செல்லிடப்பேசி ஈரமாகிவிட்டாலோ அல்லது ஸிப் லாக் பையிலிருந்து எடுத்த உடனேயோ அதனை சார்ஜ் போட வேண்டாம். வெளியில் உலர்த்திய பிறகே சார்ஜ் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments