20 பந்தில் அரை சதம்: சாஹா அதிரடி பேட்டிங்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாஹா அதிரடியாக விளையாடி 20 பந்தில் அரை சதமடித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானது. நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா அதிரடியாக விளையாடி 20 பந்தில் அரை சதமடித்துள்ளார். தற்போது சாஹா 54, கில் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
குஜராத் அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.