முகப்பு
செய்திகள்

கில், சாஹா அதிரடி: லக்னௌ அணிக்கு 228 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227 ரன்கள் எடுத்தது. 

Updated On : 7 மே 2023, 5:21 pm IST
பகிர்:

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர் சாஹா அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 81 ரன்களை எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். சுப்மன் கில் - சாஹா ஜோடி 142 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர். 12.1வது ஓவரில் சாஹா ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா 15 பந்துகளில் 25 ரன்களுக்கு அண்ணனிடம் (கிருணால் பாண்டியா) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கில், மில்லர் ஜோடி சேர்ந்து ஆடினார்கள். 

Advertisement

Advertisement

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில் 93 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். மில்லர் 21 ரன்கள் எடுத்தார். 

குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 227/2 ரன்கள் எடுத்தது. லக்னௌ அணி சார்பாக மோஷின் கான், ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments