சீருடையின் நிறம் காவிக்கு மாற்றியது ஏன்? ஹாக்கி இந்தியாவின் தலைவர் விளக்கம்!
ஹாக்கி அணியின் சீருடையின் நிறம் மாற்றப்பட்டதுக்கு ஹாக்கி இந்தியாவின் தலைவர் அளித்துள்ள விளக்கம் குறித்து...
ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கி ஜெர்ஸியின் நிறம் மாற்றப்பட்டதுக்கு, “வீரர்களின் பரிந்துரையின் பேரிலே ஜெர்ஸியின் நிறம் மாற்றப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடும் இந்திய அணியின் ஜெர்ஸி, நீல நிலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஆக. 15 முதல் ஆக.30 ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கி கூறியிருப்பதாவது:
இந்திய ஹாக்கி அணி பல ஆண்டுகளாக நீல நிறத்திலான சீருடையை அணிந்திருக்கிறது. அதில் ஒரு லெகஸி இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாம் அதிகமான தொடர்களில் நீல நிற சீருடையுடன் விளையாடி, வென்றுள்ளோம். நானுமே நீல நிற ஆடையில்தான் விளையாடினேன். ஆனால், மாற்றம் இந்தமுறை நடைபெறுகிறது.
அணியின் சீருடை நிறம் மாறுவது முதல்முறை அல்ல; 2014ல் மஞ்சள் நிற சீருடையுடன் விளையாடியுள்ளோம். 2018ல் வெளிர் நீல நிறத்துடனான உடையில் விளையாடினோம். தற்போது, பயிற்சியாளர்கள், குழுவினர், அணியின் வீரர்கள், கேப்டன் என அனைவரும் நேரடியாகவே கூறினார்கள்.
ஹாக்கியின் டர்ஃப் நீல நிறத்தில் இருக்கிறது. வீரர்களின் ஆடையும் அப்படியே இருந்தால் அவர்களுக்கு விளையாடும்போது பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்கள். எங்கோ சில இடங்களில் அவர்களுக்கு அது பிரச்னையாக இருக்கிறது.
மாற்றத்தில் மஞ்சள் மற்றும் காவி நிறம் கூறப்பட்டது. காவி நிறம் நமது தேசிய கொடியில் இருப்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தோம். வருங்காலத்தில் வீரர்கள் வேறு நிறத்தைப் பரிந்துரைத்தால் அதையும் பரிசீலிப்போம் என்றார்.
Hockey India president Dilip Tirkey explains decision to change team jersey colour to saffron from blue
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.