FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2022, 8:26 am IST
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 24-12-2022 23.20 மணி அளவில் நாகையில் இருந்து சுமாா் 330 கி.மீ. கிழக்கே தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. 

Advertisement

Advertisement

இது சற்றே வலுகுறைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (டிச. 26) இலங்கை வழியாக குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments