FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாக்பூரில் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது: அன்புமணி கண்டனம்

மிழக விவசாயிகளை மகாராஷ்டிரம் மாநில போலீஸாா் தடுத்து நிறுத்தி உள்ளது குறித்து...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 10:54 pm IST
பாமக தலைவா் அன்புமணி - கோப்புப்படம்
பகிர்:

காவிரி நீர் பிரச்னை, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிரம் மாநில போலீஸாா் தடுத்து நிறுத்தி உள்ளது அநீதியானது; கண்டிக்கத்தக்கது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

காவிரி நீர் பிரச்னை, மேக்கேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து தில்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் அந்த மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கிவிட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழக விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மகாராஷ்டிர காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

Advertisement

Advertisement

தில்லிக்கு ரயிலில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மகாராஷ்டிர அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக அந்த மாநில அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

summary

The crackdown on Tamil Nadu farmers at the Nagpur railway station is unjust: Anbumani condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments