இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 25 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
திருநங்கையாக மாறிய அனயா பங்கர் ஆஸி. மகளிர் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி!
திருநங்கையாக மாறிய அனயா பங்கர், மகளிர் கிரிக்கெட்டில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார்.
பெ. சண்முகம் கேள்வி!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சியில் மூடி மறைத்தது ஏன்? என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தில்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்!ஒசூரில் நிச்சயம் வரும்!
ராமேஸ்வரம் அருகே புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா இன்று (ஆக. 25) சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், ஓசூரில் கட்டாயம் விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ. 500 கோடி கடன்!
தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக "வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
முதல்வர் விஜய் அறிவித்த 3 சிலிண்டர் இலவசம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? தகுதி என்ன?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தவெகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஆண்டுக்கு மூன்று எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் பேரவையில் அறிவித்தார்.
சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நல்லிணக்கப் பெருவிழா! மு.க. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து
இது என்ன பொதுக்கூட்டமா? இபிஎஸ்ஸுக்கு பேரவைத் தலைவர் கேள்வி!
இளைஞர் வெட்டிக் கொலை!
திருவள்ளூர் அருகே காவல் நிலையத்தில் கையொப்பம் போட்டுவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை காரில் வந்த மர்ம கும்பல் பட்டப்பகலில் சராமரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
முதல்வர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதல்வர் ஜோசப் விஜய் இரு நாள்களுக்குள் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இலவச பேருந்து திட்டத்துக்கு எதிர்ப்பு
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்துடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
130 ஏசி மின்சார பேருந்துகள்
சென்னையில் புதிதாக 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவையை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இருந்து விலக்களிக்கக் கோரி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
விஜயகாந்தின் புகழ் நீடுவாழ்க!
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் புகழாரம்
நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 25) சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.
கவன ஈர்ப்புத் தீர்மானம்
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆக. 25) முதல் செப். 6-ஆம் தேதி வரை இரவு நேர புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.