FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 21 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 21 ஜூலை 2026, 9:36 pm IST
சிஜேபி போராட்டம் - PTI
பகிர்:
Updated On : 21 ஜூலை 2026, 9:36 pm IST

நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக! 

நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 21 ஜூலை 2026, 9:36 pm IST

ஆப்கன் மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி.. காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரம்! 

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாகப் பலியாகினர். மேலும், பேரழிவை ஏற்படுத்திய இந்த வெள்ளத்தில் காணாமல் போன 100-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

Updated On : 21 ஜூலை 2026, 9:34 pm IST

தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜி

தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 21 ஜூலை 2026, 9:33 pm IST

சென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்!

சென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக இடதுசாரி இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை எதிர்த்து தில்லியில் போராடி வரும் மாணவர் - இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராடியவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Updated On : 21 ஜூலை 2026, 7:51 pm IST

பிக் பாஸ் தொகுப்பாளராகிறார் செளரவ் கங்குலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி வங்க மொழியின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதனை ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Updated On : 21 ஜூலை 2026, 7:35 pm IST

பரபரக்கும் தில்லி.. கைது செய்யப்பட்ட ராகுலின் மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு!

தில்லியில் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட ராகுலின் மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

Updated On : 21 ஜூலை 2026, 5:09 pm IST

அவர் உடல்நிலை மீது அரசைவிட எங்களுக்கு அதிக அக்கறை உண்டு: சோனம் வாங்சுக் மனைவி

சோனம் வாங்சுக் உடல்நிலை மீது அரசைவிட எங்களுக்கு அதிக அக்கறை உண்டு என அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ இன்று தெரிவித்துள்ளார்.

Updated On : 21 ஜூலை 2026, 3:58 pm IST

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு கைதான நிலையில் முதல்வர் விஜய்யை பாடகர் அறிவு சந்தித்தார்.

Updated On : 21 ஜூலை 2026, 3:58 pm IST

சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!

தில்லியில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 21 ஜூலை 2026, 2:54 pm IST

நாடாளுமன்றம் முடங்கியது

சிஜேபி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களை காவல்துறையினர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Updated On : 21 ஜூலை 2026, 2:50 pm IST

உக்ரைனில் சரக்குக் கப்பல் மீது ரஷியா தாக்குதல்: திருமணம் நிச்சயமான கேரள மாலுமி பலி!

உக்ரைன் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதில், கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.

Updated On : 21 ஜூலை 2026, 1:38 pm IST

விஜய்யை தூக்கிப் பிடிப்பதில் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே சண்டை! அதிமுக கிண்டல்!

விஜய்யை தூக்கிப் பிடிப்பது யார் என்பதில் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே போட்டி நடைபெறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கிண்டலாகப் பேசியுள்ளார்.

Updated On : 21 ஜூலை 2026, 12:52 pm IST

ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு

சிஜேபி ஆதரவாளர்கள் மீதான தாக்குதல், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார்.

Updated On : 21 ஜூலை 2026, 12:51 pm IST

மத்திய அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் பக்கம் நிற்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 21 ஜூலை 2026, 12:25 pm IST

பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்ஜெட் தாக்கல் குறித்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று அறிவித்தபோது, செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

Updated On : 21 ஜூலை 2026, 12:25 pm IST

தமிழக பட்ஜெட் எப்போது? தேதிகளை அறிவித்தார் அவைத் தலைவர்!

ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று அறிவித்தார்.

Updated On : 21 ஜூலை 2026, 10:50 am IST

சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து

சிக்கிமில் சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது மீத்தேன் வாயு வெடித்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 21 ஜூலை 2026, 10:50 am IST

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 21 ஜூலை 2026, 10:50 am IST

டெங்கு தடுப்பூசி

இந்தியாவில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரகம் (டிசிஜிஐ) சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டகேடா (Takeda) மருந்து நிறுவனத்தின் QDENGA (TAK-003) என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Updated On : 21 ஜூலை 2026, 10:50 am IST

மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கே

தில்லியில் நடந்த சிஜேபி கட்சிப் போராட்டத்தில் மாணவர்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு அந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மன்னிப்பு கோரியுள்ளார்.

Updated On : 21 ஜூலை 2026, 10:50 am IST

ஷம்பு எல்லை மூடல்

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் விவசாயிகள் இன்று(ஜூலை 21) போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், தில்லிக்கு செல்லும் ஷம்பு எல்லைப் பகுதி, தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.

Updated On : 21 ஜூலை 2026, 10:50 am IST

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்

தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் பற்றாக்குறை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(ஜூலை 22) புதுதில்லியில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments