காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர்! காங்கிரஸ் வரவேற்பு
காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது பற்றி...
காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (ஜூலை 22) தெரிவித்துள்ளார்.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ்தலைவர் மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
Advertisement
Advertisement
தமிழ்நாட்டின் முதல்வராக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பொறுப்பேற்று ஆட்சி நடத்திய போது கல்வியில் புரட்சி செய்தார். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டி முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பதோடு, பெருந்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu Congress Committee President Manickam Tagore stated today (July 22) that he welcomes the decision to name the breakfast scheme after Kamaraj.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.