தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னணியில் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னணியில் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என மொத்தம் 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இதில் பகல் 12 மணி நிலவரப்படி 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் பாடி செல்வம், தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே. பி. அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி தொகுதி வேட்பாளர் மரகதம் வெற்றி வேல், அரூர் தொகுதி வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
Advertisement
Advertisement
இதில், அரூர் தவிர மற்ற அனைத்திலும் தவேக வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். அரூரில் மட்டும் திமுக - வேட்பாளர் 2 ஆவது இடத்தில் உள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The AIADMK alliance is leading in all five constituencies in Dharmapuri district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.