ராகுல், பிரியங்கா கைது: அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்
தில்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது அமைச்சர் அருண்ராஜ் பேசியது குறித்து...
தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது என மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (அக். 7) தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுடன் அருண் ராஜ் பேசியதாவது:
Advertisement
Advertisement
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) எதிராகப் போராடிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. நாங்கள் தொடர்ந்து எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம். தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்க வேண்டும்.
இருமொழிக் கொள்கையை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். அதில் எந்தவொரு சமரசமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
Rahul Gandhi and Priyanka Gandhi arrested: Minister Arunraj condemns the move
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.